ஈ - வரிசை 9 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈர்வெட்டு | ஈர்பட்டு. |
ஈழமண்டலம் | இலங்கை. |
ஈழைக்கொல்லி | தாளகம். |
ஈளைக்காரன் | கோழைநோயாளி. |
ஈறுகட்டி | இரசகருப்பூரம். |
ஈறுகெடுதல் | ஈரழிதல். |
ஈற்றசையோகாரம் | ஈற்றசையாகவரும்ஏகார விடைச்சொல். |
ஈனசாதி | எளியசாதி. |
ஈனத்தார் | கொன்றை. |
ஈனுமணிமை | சீதகம், புனிறு. |
ஈமம் | இ(சு)டுகாடு |
ஈமைக்கிரிகை | இறுதிச்சடங்கு |
ஈழை | ஈளை |
ஈங்கண் | இவ்விடம் |
ஈசானம் | சிவபிரானின் ஐந்து முகங்களில் ஒன்று |
ஈசாவியம் | வடகீழ்த் திசை |
ஈட்டம் | பொருள் சம்பாதித்தல் |
ஈண்டு | இவ்விடத்தில் |
ஈந்தி | ஈச்சமரம் |
ஈமத்தாழி | பண்டைக் காலத்தில் இறந்தோரை வைத்துப் புதைக்கும் ஒருவகைப் பாண்டம் |