ஈ - வரிசை 7 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈப்பிணி | உலோபி. |
ஈப்புலி | ஈயைக்கொல்லும் பூச்சி. |
ஈமகாவலன் | சுடுகாடுகாப்போன். |
ஈமத்தாடி | சிவன். |
ஈமப்பறவை | கழுகு |
ஈமவாரி | வசம்பு. |
ஈமக்கடுமை | ஈமக்கடுமை. |
ஈயக்களங்கு | வங்கவெட்டை. |
ஈயச்சுரதம் | இண்டஞ்சாறு. |
ஈயத்தின்பிள்ளை | நீலபாஷாணம். |
ஈயமலை | ஒருமலை. |
ஈயோட்டி | ஈச்சோப்பி |
ஈரங்கொல்லி | வண்ணான். |
ஈரங்கொல்லியர் | வண்ணார். |
ஈரடிமடக்கு | அடிகளு ளிரண்டடி மடங்கி வருவது. |
ஈரடிவெண்பா | குறள்வெண்பா. |
ஈரடுக்கொடி | உபயவோசை. |
ஈரப்பச்சை | ஈரப்பசுமை. |
ஈரப்பலா | ஆசினிப்பலா |
ஈரலித்தல் | ஈரமாதல். |