ஈ - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈண்டை | இங்கு |
ஈம் | சுடுகாடு |
ஈயக்கொடி | இண்டங்கொடி |
ஈயுவன் | இராவணன். |
ஈயை | இஞ்சி |
ஈருள் | ஈரல் |
ஈது | ஈதேயென்றேழி (திருவாச. 7,1.) |
ஈசி | ஓர் இகழ்ச்சிக் குறிப்பு. ஈசி போமின் (திவ். பெரியதி.1,3,8). |
ஈதா | இந்தா. அறிந்திலேனீதா (பரிபா. 8, 60). |
ஈமாந்தார் | நம்பிக்கையுள்ள |
ஈரிய | ஈரமுள்ள. |
ஈகாமிருகம் | செந்நாய் |
ஈக்க | தருக. |
ஈக்கை | புலிதொடக்கி |
ஈங்கைத்துலக்கு | ஒரு மரப்பட்டை. |
ஈசசகன் | குபேரன். |
ஈசற்போடல் | ஈசைக்கொட்டல். |
ஈசனாள் | ஆதிரைனாள். |
ஈசன்வில் | மகாமேரு. |
ஈசானதிசை | வடகீழ்த்திசை. |