ஈ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈயாப்பிசினி | கஞ்சன்,கருமி |
ஈர் | பேனின் முட்டை |
ஈர்க்கு | பனை;தென்னை ஓலையின் நடுவில் உள்ள மெல்லிய (கம்பி போன்ற) நரம்பு |
ஈர்க்குச்சி | ஈர்க்கு |
ஈர்ப்பு | (ஒருவரைத் தன்பக்கம்)இழுக்கும் தன்மை அல்லது ஆற்றல்,கவர்ச்சி |
ஈர்வடம் | பனை நாரால் பின்னப்பட்ட கயிறு |
ஈர்வலி | (தலைமுடியிலுள்ள ஈர் ,பேன் ஆகியவற்றை எடுப்பதற்குப் பயன்படுத்தும்) நீண்ட பற்களும் கைபிடியும் கொண்ட ஒருவகை மரச் சீப்பு |
ஈர்வாங்கி | ஈர்வலி |
ஈரப்பசை | (பொருள் அல்லது இடம் கொண்டிருக்கும்)நீர்த்தன்மை |
ஈரப்பதம் | ஈரத்தன்மை |
ஈரப்பதம் | பயிர் நிலங்கள் முதலியவற்றில் காணப்படும் ஈரம் |
ஈரப்பதன் | ஈரப்பதம்,ஈரத்தன்மை |
ஈரம் | நீரில் நனைவதால் பொருள்களில் காணப்படும் நீர்த்தன்மை, நீர்த்துளி,ஈரப்பதம் |
ஈரல் | ஈருள் |
ஈரலி | ஈரமாதல் |
ஈரலிப்பு | ஈரப்பதம்,ஈரம் |
ஈருருவி | ஈர்வலி |
ஈருருவி | முடிவொன்றை எடுக்காமல் இரண்டு பக்கமும் மாறிமாறி சிந்தித்துக் கொண்டிருக்கும் நபர் |
ஈருள்ளி | காரம் சற்றுக் கூடிய சிறு வெங்காயம் |
ஈரெட்டாக | ஈரெட்டான,(பெரும்பாலும் பேச்சைக் குறித்து வரும் போது)(வேண்டுமென்றே)நிச்சயமற்றதாக/நிச்சயமற்றதான |