ஈ - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈடாட்டம் | ஊசலாட்டம் |
ஈடிணை | (வடிவில்,குணத்தில்,மதிப்பில்)சரிசமம்,(ஒருவருக்கு)ஒப்பு |
ஈடு | (ஒன்றுக்கு) மாற்று |
ஈடுகட்டு | (ஒன்றின் குறையை, இன்மையை மற்றொன்றின் மூலம்) நிறைவு செய்தல்,சரிக்கட்டுதல் |
ஈடுகொடு | (ஒருவரின் திறமைக்கு மற்றொருவர்)நிகராக நிற்றல்,சமமாக இருத்தல் |
ஈடுசெய் | (இழப்பை,குறையை) சரிக்கட்டுதல் |
ஈடுபடு | (ஒரு செயலில்)முனைதல்,இறங்குதல் |
ஈடுபடுத்து | (ஒருவரை ஒன்றில்)முனையச் செய்தல் அல்லது இறங்கச் செய்தல் |
ஈடுபாடு | ஆர்வம்,நாட்டம் |
ஈடுபெற்ற கடன் | கடன் பெற்றவரின் உடைமையை ஈட்டுறுதியாகப் பெற்றுக் கொண்டு தரும் கடன் |
ஈடுபெறாத கடன் | கடன் வாங்கியவரிடம் ஈட்டுறுதியாக எதுவும் பெற்றுக்கொள்ளாமல் தரும் கடன் |
ஈடுவை | அடகு வைத்தல் |
ஈடேற்றம் | மீட்சி |
ஈடேற்று | (எண்ணத்தை, விருப்பத்தை)நிறைவேற்றுதல், (கனவை) உண்மையாக்குதல் |
ஈடேறு | 1.(நோக்கம்,விருப்பம்)நிறைவேறுதல்,(கனவு) உண்மையாதல் 2.(பெர்ம்பாலும் சமயத் துறையில்)(உலகவாழ்வின் இன்பதுன்பங்களில் இருந்து ஒருவர்)மீளுதல் |
ஈமக்கடன் | ஈமச்சடங்கு |
ஈமான் | இறை நம்பிக்கை |
ஈயப்பற்று | (மின் இணைப்புகளை அல்லது உலோக இணைப்புகளை உருவாக்குவதற்கோ துவாரங்களை அடைக்கவோ உருக்கிப் பயன்படுத்தும்)ஈயமும் தகரமும் கலந்த கலவை |
ஈயம் | கனமான |
ஈயம் பூசு | (பித்தளைப் பாத்திரத்தில் புளி முதலியவற்றால் ஆகும் இரசாயன மாற்றத்தைத் தடுக்க அவற்றின் உட்பகுதியில்) ஈயத்தை உருக்கித் தடவுதல்,கலாய் பூசுதல் |