ஈ - வரிசை 17 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈண்டென

விரைவாக

ஈழுவர்

ஈழவர்

ஈசனின் ஐம்முகம்

ஈசானம்
வாமதேவம்
அகோரம்
சத்தியோசாதம்
தற்புருடம்

ஈகரை

இரு(ஈ) + கரை

ஈழ்தல்

இறங்குதல்

ஈக்கில் வாணம்

உயரத்துக்கு செல்லும் ஈர்க்குடன் கூடிய வாண வகை

ஈக்குக்கட்டு

ஈக்கு௧்கட்டு. விளக்குமாறு. வீடு முற்றம் முதலியவற்றை பெருக்க பயன்படும் பிடியாக கட்டப்பட்ட தென்னீக்கு

ஈச்சார்

சொகுசாக படுத்து ஓய்வெடுக்க கூடிய சாய்வு நாற்காலி

ஈட்டுக்காணி

அடைமானம் வைக்கப்பட்ட காணி

ஈடாடிப் போதல்

ஸ்திரத் தன்மையினை இழத்தல்

ஈத்துமாறி

குறித்த காலத்தில் சினைப்பட்டு கன்று ஈனாத பசு அதற்கடுத்த பருவத்தில் கன்று ஈனுதல்

ஈயாச்சப்பி

உலோபி

ஈரம் சுவறுதல்

ஈரம் சுவர்தல் குளித்தபின் அல்லது நனைந்தபின் துடைப்பதற்கு தாமதமாதனால் நீர் உட்புகுதல்

ஈரல் தீஞ்சு போச்சு

திடுக்கிட்டு பயந்து போதல்

ஈர விதைப்பு

நிலம் ஈரமாக இருக்கும்போது நெல் முதலிய தானியங்களை விதைத்தல்

ஈரோட்டு

யாவாரம் ஓரிடத்தில் உள்ள பொருட்களை இன்னும் ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விற்று பின் அங்குள்ள பொருட்களை கொண்டு வந்து முதல் இடத்தில் விற்றல்

ஈன விரக்கம்

இரக்க மனப்பான்மை