ஈ - வரிசை 16 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈடிகை | அம்பு |
ஈடுகொள்ளுதல் | மனம் கனிதல் |
ஈட்டுத்தொகை | உதவித் தொகை |
ஈண்டல் | நெருங்குதல் |
ஈரப்பாடு | மன நெகிழ்ச்சி |
ஈரல் கருகுதல் | மிகவும் அஞ்சுதல் |
ஈராடி | ஈரம் |
ஈர்கொல்லி | ஈரைக்கொல்லும் கருவி |
ஈழர் | சான்றார் |
ஈழர் குலச்சான்றார் | ஏனாதி நாயனார் |
ஈற்றசை | பாட்டின் முடிவில் நிற்கும் அசை |
ஈனனம் | வெள்ளி |
ஈனன் | இழிந்தவன் |
ஈனாயம் | நிந்தை |
ஈனை | இலை நரம்பு |
ஈன்றல் | உண்டாதல் |
ஈயாடவில்லை | அவமானத்தால் ஏற்படும் முகத்தோற்றம் |
ஈரமின்றி | இரக்கமின்றி |
ஈசானிய மூலை | வடக்கு |
ஈச்சம் பழம் | சிறு சிவப்பு நிறப் பழம் இது வறல் நிலக்காடுகளில் காணப்படும் |