ஈ - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈர்க்கிறால் | இறால் மீன்வகை |
ஈர்ங்கண் | குளிர்ந்த இடம் |
ஈர்ங்கதிர் | திங்கள் |
ஈர்தல் | அரிதல் |
ஈர்த்தல் | இழுத்தல் |
ஈர்வாள் | மரம் அறுக்கும் வாள் |
ஈலி | கைவாள் |
ஈவித்தல் | பங்கிடுதல் |
ஈவுசோர்வு | சமயா சமயம். |
ஈழங்கிழங்கு | பெருவள்ளி |
ஈழதண்டம் | ஏர்க்கால் |
ஈழத்தலரி | ஒருவகை அலரி |
ஈழநாடு | இலங்கை |
ஈழவர் | சாணார் |
ஈளைத்தரை | ஈரத்தரை |
ஈறல் | நெருக்கம் |
ஈறிலான் | கடவுள் |
ஈறிலி | ஈறிலான் |
ஈறுதப்பின பேச்சு | தகாத மொழி |
ஈற்றம் | ஈனுகை |