ஈ - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈரணி | புனலாடும் போது மகளிர் அணிதற்குரியவை |
ஈரணை | இரண்டு சோடி மாடு |
ஈரநா | புறங்கூறும் நாக்க |
ஈரந்தி | காலை - மாலை |
ஈரப்பற்று | அன்புப் பற்று |
ஈப்பாடு | ஈரமாயிருக்கை |
ஈரவன் | மதி |
ஈரவுள்ளி | ஈருள்ளி |
ஈராட்டை | இரண்டு ஆண்டு |
ஈரி | மகளிர் விளையாட்டில் ஒன்று |
ஈரிச்சல் | குளிர்தல் |
ஈரிணம் | கரைநிலம் |
ஈரிதம் | தள்ளப்பட்டது |
ஈரிப்பு | ஈர்த்தல் |
ஈரியது | ஈரமுள்ளது |
ஈரிய நெஞ்சம் | அன்புள்ள மனம் |
ஈருயிர்ப்பிணவு | சூல்கொண்ட பிணவு |
ஈரெச்சம் | பெயரெச்சம் |
ஈரொற்றுவாரம் | இரண்டு மாத்திரை பெற்று வரும் செய்யுள் |
ஈர்க்காட்டு | கார்காலத்து உடை |