ஈ - வரிசை 12 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈட்டுதல் | கூட்டுதல் |
ஈட்டுப்பத்திரம் | அடைமான சாசனம் |
ஈணவள் | ஈன்றவள் |
ஈண்டுநீர் | கடல் |
ஈதி | மிகுந்த மழை |
ஈதியாதை | தருமசங்கடம் |
ஈதை | துன்பம் |
ஈத்த | கொடுத்த |
ஈத்தந்து | கொடுத்து |
ஈநம் | இழிவு |
ஈப்பிலி | ஈயைக் கொல்லும் ஒரு வகைப் பூச்சி |
ஈமவனம் | சுடுகாடு |
ஈமன் | சிவன் |
ஈயவரி | பெருமருந்து |
ஈயன்மூதாய் | இந்திரகோபம் |
ஈயெச்சிற்கீரை | புதினாக்கீரை |
ஈரசைச்சீர் | இரண்டசைச்சீர் |
ஈரடிப்பயன் | கவர்பொருள் |
ஈரடுக்கொலி | இரட்டையாக அடுக்கி வரும் ஒலிக் குறிப்புச் சொல் |
ஈரணம் | வெறுநிலம் |