ஈ - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈசிகை | சித்திரமெழுதுங் கோல் |
ஈசிதை | ஈசத்துவம் - எண்வகைச் சித்திகளுள் ஒன்று |
ஈசுரலீலை | கடவுள் திருவிளையாடல் |
ஈசுரார்ப்பணம் | கடவுளுக்குரிய தாக்குகை |
ஈசுவரவிந்து | பாதரசம் |
ஈசுவரிவிந்து | ஈசுவரிபிந்து |
ஈசுவை | பொறாமை |
ஈசை | ஏர்க்கால் |
ஈடகம் | மனத்தைக் கவர்வது |
ஈடணை | அவா |
ஈடழிதல் | பெருமைகள் கெடுதல் |
ஈடறவு | சீர்கேடு |
ஈடன் | பெருமையுடையவன் |
ஈடாதண்டம் | ஏர்க்கால் |
ஈடுகட்டுதல் | பிணைகொடுத்தல் |
ஈடுகொடுத்தல் | எதிர் நிற்றல் |
ஈடேறுதல் | உய்யப் பெறுதல் |
ஈடேற்றுதல் | உய்வித்தல் |
ஈட்சணம் | நோக்கம் |
ஈட்டல் | தேடுதல் |