ஈ - வரிசை 10 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈரொட்டு | நிச்சயமில்லாமை |
ஈவோன் | கொடையாளி |
ஈழம் | சிங்களத் தீவு |
ஈற்றா | (ஈற்று + ஆ) கன்று போட்ட பசு |
ஈன்றாள் | தாய் |
ஈனல் | பிரப்பித்தல் |
ஈனோர் | இவ்வுலகினர் |
ஈகுதல் | கொடுத்தல் |
ஈகையன் | கொடையாளன். |
ஈகையரியவிழை | மங்கலிய சூத்திரம். |
ஈக்குடி | சாவிக்கதிர். |
ஈங்கம் | சந்தன மரம் |
ஈங்கனம் | இருப்பிடம் |
ஈங்கன் | ஈங்கனம் |
ஈங்கிசை | கொலை |
ஈசன்தார் | கொன்றை மாலை |
ஈசன் தினம் | திருவாதிரை |
ஈசாவாசியம் | நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. |
ஈசானகோணம் | வடகீழ்த்திசை |
ஈசானி | உமையவள் |