இ - வரிசை 99 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இடறுகாலி | மறைமுகமான வேற்று நோக்குடன் நிராகரித்தல், குழப்புதல் முதலியவற்றை செய்யும் நபர் |
இடியப்ப உரல் | இடியப்பம் அவிக்க மாவைப் பிழியும் அச்சு |
இடியப்பச்சிக்கல் | தீர்வு காண்பதற்கு மிகவும் சிரமானதொரு பிரச்சனை |
இடியப்பத்தட்டு | இடியப்பம், கொழுக்கட்டை முதலியவற்றை வைத்து அவிப்பதற்கு பயன்படும் பிரம்பு அல்லது பனை ஈர்க்கினால் செய்யப்படுவது |
இடி விழுந்த பனை | மின்னல் தாக்கத்துக்கு உட்பட்ட பனை |
இடுக்கு பனை | அதிக கள் ஊறும் பனை மரம் |
இடைச் சோழகம் | உரிய காலத்துக்கு முன்னர் வீசும் சோழகக் காற்று |
இடைஞ்சு போதல் | மெலிந்து நலிவடைந்து போதல் |
இடைத்தங்கல் முகாம் | அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கிடையிலான இருந்து யுத்தத்தின் போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அரச கட்டுப்பாடுக்குள் வந்த மக்களை தடுத்து வைத்திருந்த முகாம் |
இடைநடுவில் போவான் | இடைநடு வயதில் இறந்து போவான் என்ற கருத்திலான திட்டுதற் குறிப்பு |
இடைநீரில் நிற்றல் | நிற்பது போல் தோன்றும், நிலைக்குத்தாக நீரில் நீந்தும் ஒரு நீச்சல் முறை |
இடைப்போகம் | பிரதான போகங்களுக்கிடையில் பயிர் செய்கைமேற்கொள்ளப்படும் காலப்பகுதி |
இடைவளை | கூரையைத் தாங்கும் ஊசிக்காலை நிறுத்தக் கூடிய வகையில் இரண்டு சுவர்களிற்கு இடையில் வைக்கும் பலமான மரம் |
இடைவெட்டுப் பணம் | மாற்று வழிகளில் கிடைக்கும் வருமானம் |
இண்டு | இன்று |
இண்டைக்கோ நாளைக்கோ என இருத்தல் | வெகு விரைவில் உயிரிழந்து விடுவார் என்ற குறிப்பு |
இண்டைய பாட்டுக்கு | இன்றைய தேவைக்கு, குறிப்பிட்ட நாளில் இருந்த சூழ்நிலைக்கேற்ப |
இணி | நீளப்போக்கில் அமைந்துள்ள காணித்துண்டு |
இணைக்கூறை | கூறைச்சீலைக்கு மேலதிகமாக மணமகன் மணமகளிற்கு கொடுக்கும் சேலை |
இத்தயவரை | இற்றைய வரை, இதுவரை |