இ - வரிசை 98 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இங்கினை | ஏறத்தாள இந்த இடத்தில் |
இங்கேர் | இங்க பார் |
இங்கேரடா | ஆண் ஒருவரை சுட்டி இங்கே பார் எனக் குறிப்பிடும் முறை |
இங்கேரடி | பெண் ஒருவரை சுட்டி இங்கே பார் எனக் குறிப்பிடும் முறை |
இசக்குப் பிசக்காக | தவறாக, முறைதவறி |
இசங்கி முசங்கி | இயலாத நிலையிலும் முயன்று செயற்படல் |
இஞ்சாருங்கோ | கணவனை மனைவி விளிக்கும் முறை |
இஞ்சார் | கணவன் மனைவியை கூப்பிடும் முறை |
இஞ்சின் | இயந்திரம் |
இஞ்சுப்பெத்தர் | பரிசோதகர் |
இஞ்சேர் | இங்க பார், கணவன் மனைவியை கூப்பிடும் முறை |
இட்டல் இடைஞ்சல் | துன்பம், ஏழ்மை |
இட்டு முட்டு | இடநெருக்கடி கொண்ட, சாப்பிட்ட பின் ஏற்படும் அசெளகரியத் தன்மை |
இடங்காண் | மற்றவர்கள் நெகிழ்ச்சியாய் இருப்பதை புரிந்து தன்னிஷ்டப்படி நடத்தல் |
இடத்தில் நிற்றல் | விலகி நிற்றல் |
இடப்பு | பெரிய கட்டியாகக் காணப்படும் மண், புண்ணாக்கு, அரப்பு போன்றவை |
இடப்புப் பெயர்த்தல் | கட்டி கட்டியாக எடுத்தல் |
இடம்புதல் | மீறுதல், உச்சுதல் |
இடம் வலம் | ஒரு இடம் அமைந்துள்ள இடம் மற்றும் அதற்கு எவ்வாறு செல்வது என்ற விபரம் |
இடறிவிடுதல் | நிராகரித்தல், குழப்புதல் |