இ - வரிசை 97 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இலக்கணக் குறியீடு

இலக்கணம் தொடர்புடைய சொற்கள், குறியீடுகள்

இராச்சியம்

நாடு

இஞ்ச

(யாழ்ப்பாண வழக்கு)இங்கே

இனியவன்

இனிமையானவன்; பிறருடன் பழகுவதிலும் கவர்வதிலும் சிறந்தவன்

இசைக் கருவி

தோற் கருவி
துளைக் கருவி
நரம்புக் கருவி
கஞ்சக் கருவி
கண்டக் கருவி

இராசிக் குரிய செயல்

ஓரை
சுடர்ச் செலவு
திரேக்காணம்
நவாமிசம்
துவாதசாமிசம்
கோட்கூறு

இருடிகள்

அகத்தியன்,புலத்தியன்,அங்கிரசு,கெளதமன்,வசிட்டன்,காசிபன்,மார்க்கண்டன்(7)
அத்திரி,பிருகு,குச்சன்,வசிட்டன்,கெளதமன்,காசிபன்,அங்கிரசு(7)
மரீசி,அத்திரி,அங்கிரசு,புலஸ்தியன்,புலகன்,கிரது,வசிட்டன்(7)
அத்திரி,வசிட்டர்,புலஸ்தியர்,கிருது,பரத்வாசர்,விஸ்வாமித்திரர்,பிரதேசன்,ருசிகர்,அகத்தியர்,ததீசி, துர்வாசர்(11)

இருதுக்கள்

வசந்தருது - சித்திரை, வைகாசி
கிரீஷ்மருது - ஆனி, ஆடி
வ்ருஷருது - ஆவணி, புரட்டாதி
சரத்ருது - ஐப்பசி, கார்த்திகை
ஹேமந்த ருது - மார்கழி,தை
சசிருது - மாசி, பங்குனி

இழிச் சொல்

குறளை
பொய்
கடுஞ் சொல்
பயனில் சொல்

இறைவன் குணங்கள்

தன்வயத்தனாதல்
தூய உடம்பினனாதல்
இயற்கை உணர்வினனாதல்
முற்றும் உணர்தல்
இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்
பேரருளுடைமை
முடிவில்லாத ஆற்றல் உடைமை
வரம்பில்லாத இன்பம் உடைமை

இளம் பஞ்ச பாண்டவர்

பிரிதிவிந்தன்
சுருதசோமன்
சுருத கீர்த்தி
சதாநீகன்
சுருத சேனன்

இடை வள்ளல்

அக்குரன்
சந்திமான்
அந்திமான்
சிசுபாலன்
தந்தவக்கிரன்
கன்னன்
சந்தன்

இளைஞி

இளவயது பெண்

இருமம்

கணணி உலகில் இயந்திர மொழி, அதாவது இன்றைய இலக்க முறை உலகில்(digital world ) எந்த ஒரு இயந்திரமுமே ஒன்று (1 அ 0) இக்குறியீடுகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது. இவ்விரண்டு குறிகளை கொண்ட குறிமுறை இருமம்(binary digit) எனப்படும்.

இளங்கிளைமை

இளைய புதல்வர்கள்

இருப்பளவு

குறித்த களஞ்சியத்தின் இருப்பின் அளவை அறிவதற்காக எடுக்கப்படும் அளவு.

இணையர்

கணவன் + மனைவி = தம்பதியர்

இங்கத்தையான்

இவ்விடத்தில் உற்பத்தியான பொருள், இவ்விடத்தை சேர்ந்த நபர்

இங்காலை

இங்கு, இப்பக்கம்

இங்காலையும் பாடி அங்காலையும் பாடுதல்

முரண்பட்ட கருத்து நிலை காணப்படும் போது சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு இருபக்கமும் மாறி மாறி சார்ந்து பேசுதல்