இ - வரிசை 94 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இம்பர் | இவ்வுலகம். உம்பரு மிம்பரு முய்ய (திருவாச. |
இராசிலம் | சாரைபாம்பு. (சூடா.) |
இரந்திரம் | துவாரம் |
இலிர் | தளிர் |
இமப்பிரபை | ஓர் நரகம் |
இகளை | வெண்ணெய் |
இடும்பன் | இடும்புக்காரன் |
இடலை | சைதூண் |
இடவயின் | இடத்து. ஒல்லா ரிடவயின் (தொல்.பொ.76) |
இகா | முன்னிலையசை. (கலித்.105, உரை.) |
இசைநிறை | செய்யுளில் இசைநிறைத்தற்கு வருஞ் சொல் (நன்.395.) |
இத்தை | முன்னிலையசைச் சொல் நீயொன்று பாடித்தை. (நன்.440, உரை). |
இருந்து | A sign of the (abl.) case as in எங்கிருந்து |
இற்று | A euphonic particle occurring in the combination of the different parts of the same word, or of two distinct words, as in அவையிற்றை, பதிற்றுப்பத்து |
இறே | பிரசித்தி, தெரியவேண்டியவிஷயம், தெளிவு இவற்றைக் குறிக்குஞ் சொல். (ஈடு, 2, 1, 1.) |
இயர் | வியங்கோள்விகுதி. பொய்யா கியரோ பொய்யா கியரோ (புறநா. 233). |
இராசியம் | தாமரை |
இராவைக்கு | இரவுக்கு. இராவைக்குப் போனகப் பழவரிசி. (S.I.I. ii, 146.) |
இயலெண்கள் | செவ்வெண்கள் |
இயல்பான | இயல்பெளிமை |