இ - வரிசை 93 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இருளன் | ஒரு கிராம தெய்வம் |
இரேகை | (ரேகா) கோடு |
இல்லக்கிழத்தி | மனைவி |
இல்லான் | வறியவன் |
இலக்கினம் | சுப கரியம் செய்யக் குறிக்கப்படும் நேரம் (சுபமுகூர்த்தம்) |
இலக்குமி | செல்வம் |
இலகிமா | (அட்டசித்திகளின் ஒன்றான) பளுவின்மையாதல் |
இலங்கணம் | பட்டினியிருத்தல் |
இலங்கை | ஈழ நாடு |
இலச்சினை | முத்திரை |
இலச்சை | நாணம் |
இலஞ்சி | குளம் |
இலம் | வறுமை |
இலம்பகம் | மாதர் நெற்றியிலணியும் ஓர் ஆபரணம் |
இலவந்திகை | எந்திரத்தினால் நீரை நிரப்பவும் வெளியேற்றவும் ஏற்பட்டுள்ள ஒரு குளம் |
இலாகா | அரசாங்கப் பிரிவு |
இலேகன் | எழுதுவோன் |
இலேசம் | அற்பம். என்னிடம் இலேசமுமில்லை. |
இலேசு | அற்பம் |
இலையமுது | வெற்றிலை |