இ - வரிசை 92 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இராத்தல்

நாற்பது தோலா எடை

இராமபாணம்

இராமரின் அம்பு
புத்தகங்களைத் துளைக்கும் ஒரு பூச்சி வகை
ஒருவகை மல்லிகை

இராயசம்

எழுத்து வேலை

இராவணன்

இலங்கை வேந்தன்
ஒரு தமிழ் வீரன்
ஆய கலைகளின் நாயகன்

இராவுத்தன்

குதிரை வீரன்
தமிழ் முஸ்லிம்களில் ஒரு பிரிவினரின் பட்டப்பெயர்

இர்

பின்வாங்கி ஓடு
விலகி விழு
தோற்று ஓடச் செய்
கெடு
அச்சம் கொள்
[இரிதல், இரித்தல்]

இரியல்

விரைந்தோடுதல்
அச்சத்தால் நிலை குலைதல்
அழுதல்

இரியல்போ

தோற்றோடு

இருக்கு

ரிக்வேதம்
வேதமந்திரம்

இருடி

முனிவன்

இருதலை

இரண்டு தலைகள்
இருமுனை
இருபக்கம்

இராமன்

ஆரிய அரசன்

இருது

(ருது) பருவகாலம்
மகளிர் பூப்பு

இருப்பை

இலுப்பை மரம்

இருபான்

இருபது

இருபெயரொட்டு

இரு பெயர்கள் இணைந்து 'ஆகிய' என்னும் உருபுதொக்கு நிற்பது

இருபோகம்

நிலத்தில் ஓர் ஆண்டில் இருமுறை பயிரிடல்

இருபூ

இருபோகம்

இருமுதுகுரவர்

தாய்
தந்தையர்

இருவினை

நல்வினை தீவிணைகள்