இ - வரிசை 91 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரட்டல் | இரட்டித்தல் |
இரட்டு | இரண்டாகு |
இரட்டுறு | இரு பொருள் படு |
இரண வைத்தியம் | கத்தியால் அறுத்துச் செய்யும் வைத்திய சிகிச்சை |
இரத்தப்பிரியன் | கொலை விருப்பமுடையவன் |
இரத்த மண்டலி | சிவப்புப் புள்ளிகளுள்ள ஒரு விஷப்பாம்பு |
இரத்தின கம்பளம் | வர்ணச் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கம்பளம் |
இரதம் | தேர் |
இரதி | மன்மதன் மனைவி |
இரப்பு | பிச்சையெடுத்தல் - இரப்பாளன் |
இரலை | ஒருவகை மான் |
இரவி | கதிரவன் |
இரவுக்குறி | (அகப்பொருள்) இரவில் காதலர் கூடுவதற்குக் குறிக்கப்பட்ட இடம் |
இரற்று | சத்தமிடு |
இரா | இராத்திரி |
இராக்கதம் | பெண்ணை வலிதல் கொண்டுசென்று மணந்து கொள்ளல் |
இராக்குருடு | மாலைக்கண் |
இராகு | நவக்கிரகங்களில் ஒன்று |
இராசபிளவை | முதுகில் தோன்றும் பிளவைக் கட்டி |
இராட்டினம் | (சக்கரமுள்ள) நூற்கும் கருவி |