இ - வரிசை 90 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இமம் | பனி |
இமாம் | தொழுகையை நடத்தும் தலைவர் |
இமிசி | துபுறுத்து |
இமிர் | ஒலி செய் |
இமில் | எருதின் திமில் |
இமிழ் | ஒலி |
இமைப்பு | கண்ணிமைப் பொழுது |
இமையார் | (கண்ணிமைத்தல் செய்யாத) தேவர் |
இயக்கன் | இயக்கரில் ஒருவன் |
இயமன் | யமன் |
இயமானன் | யாகத் தலைவன் |
இயல்பு புணர்ச்சி | (இலக்கணம்) சொற்கள் விகாரமில்லாமல் புணர்தல் |
இயல்புளி | விதி முறைப்படி |
இயவு | வழி |
இயவுள் | கடவுள் |
இயற்சொல் | எளிதில் பொருள் விளங்கும் சொல் (எதிர்மொழி - திரிசொல்) |
இயற்றமிழ் | முத்தமிழுள் ஒன்றான செய்யுள் அல்லது உரைநடை இலக்கியத் தமிழ் |
இயன் மொழி | தலைவனைப் புகழ்ந்து கூறும் புறத் துறை |
இரசதம் | வெள்ளி |
இரசம் | சாறு |