இ - வரிசை 9 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இத்தருதி | இந்தத் தருணம் |
இத்தனை | இந்த அளவு(இவ்வளவு) |
இத்தனைக்கும் | முதல் கூற்றை அதற்குப் பொருந்தாத இரண்டாவது கூற்றுடன் தொடர்புபடுத்த இரண்டு வாக்கியங்களுக்கிடையில் பயன்படுத்தும் இடைச்சொல் |
இத்தனைக்கும் | இவ்வளவு நடந்த பிறகும் |
இத்துடன் | குறிப்பிட்ட ஒன்றுடன் (ஒரு நிகழ்ச்சி, செயல் போன்றவை முடிவடைகிறது) என்ற பொருளில் ஒரு வாக்கியத்தின் முதலில் வரும் இடைச்சொல் |
இதம் | இசைவாகவும் அளவாகவும், அனுபவிக்கத் தகுந்ததாகவும் இருப்பது,சுகம் |
இதயம் | சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்திருப்பதுமான தசையால் ஆன உள் உறுப்பு |
இதர | பிற ,மற்ற |
இதரை | தடித்த தோலோடு வடிவத்திலும் சுவையிலும் மலைப்பழம் போல இருக்கும் ஒரு வகைப் பெரிய வாழைப் பழம் |
இதழ் | பூக்களில் அமைந்திருக்கும் மெல்லிய ஏடு போன்ற பாகம் உதடு |
இதழாளர் | பத்திரிக்கையாளர் |
இதழியல் | பத்திரிக்கைகள்,செய்தி நிறுவனங்கள்,வானொலி,தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்குச் செய்திகளைத் தொகுத்தல், எழுதுதல் போன்றவை குறித்த துறை |
இதற்கமைய | இதன்படி,குறிப்பிட்டதன்படி |
இதற்குள்ளே | ஒரு செயல் எதிர்பார்த்ததைவிட விரைவாக நடந்துவிட்டதை வியப்புடன் குறிப்பிடப் பயன்படுத்தும் இடைச்சொல் |
இதன் | இது என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது பயன்படுத்தப்படும் வடிவம் |
இதிகாசம் | காப்பியம் |
இது | பேசுபவருக்கு அருகில் இருக்கும் ஒன்றை அல்லது ஒருவரைக் குறிக்க அல்லது வாக்கியத்திலோ அல்லது பத்தியிலோ சற்று முன்னர் குறிப்பிட்ட பெயரை மீண்டும் குறிப்பிடப் பயன்படுத்தும் பிரதிப்பெயர் |
இதுவரை | இதுகாறும்,இந்த நேரம் முடிய |
இதே | (குறிப்பிட்ட சூழலில்) சுட்டிக் காட்டப்படும் (ஒருவர் அல்லது ஒன்று) |
இதோ | அருகில் உள்ள ஒன்றை அல்லது ஒருவரைச் சுட்டிக்காட்டுவதற்காகப் பயன்படுத்தும் இடைச்சொல் |