இ - வரிசை 89 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இன்னா

துன்பம்
இன்னல்

இன்னா

என்ன

இடறல்

கால் தடுக்குதல்
தடை
தண்டனை: பழி: கால் தடுக்கை

இடும்பு

செருக்கு
குறும்புச் செயல்

இடும்பை

துன்பம்
தீங்கு
நோய்
வறுமை

இடைச்சி

முல்லை நிலப் பெண்
இடையர் இனப் பெண்

இடையர்

ஆடு மாடு மேய்க்கும் தொழில் செய்யும் இனத்தார்
முல்லை நிலத்தவர்

இடையெழுத்து

இடைநிலை

இண்டர்

இடையர்

இண்டை

பூமாலை
தாமரை
முல்லை

இணர்

பூங்கொத்து
மலர்ந்த பூ
பூந்தாது
பழக்குலை
தீச்சுவாலை
வரிசை
ஒழுங்கு
கிச்சிலி

இத்துணை

இவ்வளவு
சிறிதளவு

இதரன்

அன்னியன்

இந்தனம்

விறகு

இந்திரகோபம்

(மழைக்குக் பிறகு வெளி வரும்) தம்பலப் பூச்சி

இந்திரசாலம்

மாயவித்தை

இந்திரவில்

வானவில்

இந்திராணி

இந்திரன் தேவி

இப்பர்

வணிகரில் ஒரு வகையார்
பசுக்களைப் பாதுகாக்கும் வைசியர் (கோவைசியர்)

இப்பால்

இவ்விடம்
பிறகு