இ - வரிசை 88 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இசி | ஒடித்தல் |
இசிப்பு | இழுத்தல் |
இசின் | இறந்த காலவிடை நிலை. (நன்.145, விருத்) |
இசும்பு | ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி |
இசைகேடு | ஸ்வரத்தில் பிழை |
இசைத் தமிழ் | (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு |
இட்டதேவதை | (இஷ்ட தேவதா) வழிபடு கடவுள் |
இட்டலி | அரிசி மாவு |
இட்டிது | சிறிது |
இட | பிள |
இடக்கர் | அவையில் சொல்லத் தகாத சொல் |
இடங்கழி | எல்லை கடக்கை |
இடங்கொடு | கண்டீப்பு இல்லாது நட [இடங்கொடுத்தல்] |
இடப்பொருள் | வேற்றுமைப் பொருள் |
இடம்பம் | ஆடம்பரம் |
இடர்படு | துன்புறு |
இடவழு | (இலக்கணம்) தன்மை முதலிய மூவிடங்களில் ஒன்றுக்குப் பதில் மற்றொன்றை அமைக்கும் தவறு |
இடவாகுபெயர் | (இலக்கணம்) ஓர் இடத்தின் பெயர் அங்குள்ள பொருளுக்கு ஆகிவருவது |
இட்டரை | இரு புறமும் வேலிகள் உடைய கறுகிய பாதை |
இர | கெஞ்சிக்கேள் |