இ - வரிசை 87 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரண்டுக்குப் போதல் | மலம் கழித்தல். |
இழுக்காதே | ஒருவனை இனிமையாகப் பேசித் தீய வழியில் செல்லவைக்காதே. |
இலம்போதரர் | பிள்ளையார் |
இருவாய்க்குருவி | இருவாய்ச்சி |
இடிச்செவி | வராககர்ணி |
இரகசியமாக | மறைவாக |
இடபம் | எருது |
இவரி | எதிர் |
இலவங்கபத்திரி | புண்ணை இலை |
இலவு மரம் | இலவம் |
இக்கு | கரும்பு |
இக | முன்னிலையசைச்சொல். (தொல்.சொல்.276.) |
இகபரம் | இம்மையும் மறுமையும் |
இகல் | பகை |
இகுளை | தோழி |
இங்கே | இங்கு |
இங்ஙன் | இங்கு |
இங்ஙனம் | இங்கு |
இச்சாசத்தி | (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி |
இச்சாசக்தி | இச்சாசத்தி |