இ - வரிசை 86 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இந்திரதிருவன் | இந்திரனைப் போன்ற செல்வத்தையுடையவன் |
இந்திரர் | மேலான அதிகாரமுடையவர் |
இந்திராபதி | திருமால் |
இந்திரைகேள்வன் | திருமால், இந்திரன் |
இந்துசிகாமணி | சிவபெருமான் |
இயமங்கியார் | பரசுராமர் |
இயவ்வாணர் | புலவர் |
இயாகாபதி | இந்திரன் |
இரணிய கருப்பன் | நான்முகன் |
இருதயராசன் | இதயத்தின் அரசன், அன்பழகன் |
இருடிகேசன் | திருமால் |
இளமுருகு | இளைய முருகன் |
இறைகுமாரன் | இறைவனின் குமாரன், குமரன் என்னும் இறைவன் |
இனியன் | இனியவன் |
இன்பசெல்வம் | எல்லையில்லா இன்பத்தை அளிக்கும் செல்வப்பேறு |
இன்பசெல்வன் | எல்லையில்லா இன்பத்தை அளிக்கும் செல்வப்பேற்றை பெற்றவன் |
இஷ்டம் | விருப்பம் |
இடம் போடுதல் | பேருந்து வண்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது தனக்கென்று ஒரு இடத்தைத் துண்டு போட்டு கைப்பற்றுதல். |
இத்யாதி | இதைப் போன்று இன்னும் பிற. |
இரட்டைக் கிளவி | இணையாக வருவதும் பிரித்தால் பொருள் தராததுமான சொல். எடுத்துக்காட்டு : கலகல : தொள தொள : கமகம : படபட. |