இ - வரிசை 84 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இறுப்ப | கிடக்க. |
இறுமளவும் | இறுவரையும். |
இறுவரை | முடிவு. |
இறுவரையும் | சாமளவும். |
இறுவாய் | முடிவு. |
இறைகூடி | அரசாண்டு. |
இறைகொண்ட | தங்குதல் கொண்ட. |
இறைஞ்சலர் | சத்துருக்கள். |
இறைஞ்சார் | பகைவர். |
இறைப்பிளவை | கைவரைச்சிலந்தி. |
இறைமகள் | இராஜபுத்திரி. |
இறைமாண்டார் | அரசர். |
இறைமையாட்டி | அரசி, தலைவி. |
இரையனாரகப்பொருள் | ஒருபொருளிலக்கணம். |
இறையிலி | இறைகொடுக்காதவன். |
இறைவனவேம்பு | சிவனார்வேம்பு. |
இறபிறப்பு | குடிப்பிறப்பு. |
இற்புலி | பூனை |
இனங்காக்கும்யானை | திரட்குத் தலையானை. |
இனா | நகைச்சொல். |