இ - வரிசை 83 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இளையவர் | பெண்கள். |
இளையவன் | இளையோன். |
இளைவலி | கரிக்காடு. |
இறகடிமுள் | முருந்து. |
இறக்குதுறை | இறங்குதுறை. |
இறங்கண்டம் | ஒருவகை அண்டநோய். |
இறங்குபொழுது | சாயங்காலம். |
இறங்குமட்டான் | இறங்கமாட்டான். |
இறஞ்சி | அவுரி. |
இறந்தகாலவிடைநிலை | கழிந்த காலத்தைக்காட்டும் இடைச்சொற்கள். |
இறந்திரி | இத்தி. |
இறந்துபடுதல் | சாதல். |
இறந்தோர்சேர்வனம் | மசானம். |
இறாட்டாணியம் | இடுக்கண். |
இறாத்துக்கட்டுதல் | கட்டித்தூக்குதல். |
இறுகக்கட்டல் | அழுந்தக்கட்டல். |
இறுகத்தழுவல் | இறுகவணைத்தல். |
இறுகினகை | ஈயாதகை. |
இறுதிக்காலம் | முடிவுக்காலம். |
இறுநாகம் | இலாமிச்சை. |