இ - வரிசை 82 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இளந்தண்டு | முளைக்கீரை. |
இளந்தலைக்கைம் பெண்சாதி | பாலியவிதவை. |
இளமரம் | கன்று. |
இளமழை | சிறுமழை. |
இளம்பசி | காலப்பசி, சிறுபசி. |
இளம்பிராயம் | இளம்பருவம். |
இளம்பிள்ளை | குழந்தை. |
இளவாதித்தன் | வாலசூரியன். |
இளவிளவேனில் | துளிர்காலம். |
இளவெந்நீர் | சிறு சூடானநீர். |
இளவேந்து | இளவரசு. |
இளாவிருதம் | நவகண்டத்தொன்று. |
இளிச்சற்கண் | பீளைக்கண். |
இளித்தவாய்ப் பட்டம் | இளிச்சவாயன்எனப்படுகை. |
இளிபிளி | தசரதன்மகன். |
இளிபுரிதல் | இகழ்ச்சிசெய்யல். |
இளைசு | இளையது |
இளைஞர் | இளையோர். |
இளைது | இளையது. |
இளைப்பாறுமண்டபம் | வசந்தமண்டபம். |