இ - வரிசை 81 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இழைவாங்கி | இழையூசி. |
இளகினபொன் | சுத்தமானபொன். |
இளக்கரம் | இளக்கம். |
இளக்கும் | அசைக்கும். |
இளங்கலையான் | ஒரு நெல். |
இளங்கற்றி | இளங்கன்றுபசு. |
இளங்கார் | ஒரு நெல். |
இளங்குடர் | கடைக்குடல். |
இளங்குமணன் | குமணன் தம்பி. |
இளங்கொடி | சிறுகொடி, நஞ்சுக்கொடி, பெண். |
இளங்கொடி | மாடு கன்று ஈன்ற பின்னர் வெளியேறும் தொப்புள்கொடி முதலியனவை |
இளங்கொம்பு | வளார். |
இளங்கோக்கேள் | வைசியர் பொது. |
இளங்கோசர் | கொங்குமண்டலத்தரசர். |
இளசாட்சசம் | கொன்றை. |
இளஞ்சந்திரன் | இளம்பிறை. |
இளஞ்சாயம் | வெண்சாயம். |
இளஞ்சி | ஈனாக்கத்திரி. |
இளஞ்சூடு | சிறுசூடு. |
இளநீர்க்குழம்பு | ஒரு கண்மருந்து. |