இ - வரிசை 80 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இழிதகவு

இழிவு, எளிமை.

இழிவுபடல்

ஈனப்படல்.

இழுக்குச்சொல்

ஈனமான வார்த்தை.

இழுக்குடையான்

கீழானவன்.

இழுத்துக்கொண்டுவல்

நாள்தள்ளுதல்.

இழுத்துப்பேசல்

கெட்டியாகப்பேசல்.

இழுபறிருபடுதல்

தொந்தரைப் படுதல்.

இழுப்பாளி

தாமதக்காரன்.

இழுப்புப்பறிப்புப்படல்

அவதிப்படல்,போராட்டப்படல்.

இழுப்புமாந்தம்

ஒருவகைமாந்தநோய்.

இழுவைக்கயிறு

இழுக்குங்கயிறு, நெடுங்கயிறு.

இழைகட்டுதல்

காப்புக்கட்டுதல்.

இழைகூடு

இழைப்புளி.

இழைத்து

எழுதி.

இழைநெருக்கும்

இழைக்குளிர்த்தி.

இழைப்பிடித்தல்

காயங்கட்டல்.

இழைப்பிடித்தல்

காயத்தினை தைத்தல்

இழைப்புடைவை

நல்லாடை.

இழையிடல்

இழைபோடல்.

இழையோடுதல்

நூலோடுதல்.