இ - வரிசை 8 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இணைகரம் | இணையான எதிர்ப் பக்கங்களைக் கொண்ட நன்கு பக்க வடிவம் |
இணைகோடு | ஒரு கோட்டைத் தொடாமல் சம இடைவெளியில் இணையாகச் செல்லும் மற்றொரு கோடு |
இணைசேர் | 1.(பறவை,விலங்கு,பூச்சிகள் முதலியன)இனப்பெருக்கத்துக்காக ஒன்றுசேருதல் 2.(ஜோடியாகப் பொருந்துமாறு) ஒன்றுசேர்த்தல் |
இணைதிறன் | ஒரு தனிமத்தின் ஓர் அணு சேரக்கூடிய மற்றொரு தனிமத்தின் அணுக்களின் எண்ணிக்கை அல்லது நீக்கக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை |
இணைப்பகம் | (தொலைபேசி)தொடர்பகம் |
இணைப்பு | ஒன்றாகத் தொடர்பு படுத்தப்பட்ட நிலை, சேர்ந்திருக்கும் நிலை |
இணைப்புப் பெட்டி | விபத்தில் சிக்கினாலும் ஒரு பெட்டி இன்னொரு பெட்டிக்குள் சென்று நொறுங்கிவிடாத வகையில் தயாரிக்கப்பட்ட இரயில் பெட்டி |
இணைப்புரிமை | (ஒரு கல்லூரி அல்லது ஆய்வு நிறுவனம்) பாடத்திட்டம் ,தேர்வுகள் ,பட்டம் வழங்குதல் போன்றவற்றுக்காக மட்டும் ஒரு பல்கலைக்கழகத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளும் ஏற்பாடு |
இணைபிரியாத | (ஒருவரை விட்டு ஒருவர் )பிரிந்திருக்காத |
இணைபிரியாமல் | (ஒருவரை விட்டு ஒருவர்)நீங்காமல்,பிரியாமல் |
இணைய இதழ் | இணையதளத்தில் வெளியிடப்பட்டு ,இணையத்தின் மூலம் மட்டுமே படிக்கக்கூடிய பத்திரிக்கை |
இணையகம் | (பணி விரிவடையும் போது)இடத் தேவை கருதி பயன்படுத்தும் துணைக் கட்டடம் |
இணையதளம் | இணையத்தில் குறிப்பிட்ட செய்தி ,தகவல்,விபரம் போன்றவற்றைக் கொண்ட(குறிப்பிட்ட அமைப்பு ,தனிநபர் போன்றோர் வடிவமைத்து நிர்வகிக்கும்)தகவல் தொகுப்பு |
இணையப் பல்கலைக்கழகம் | இணையத்தின் மூலம் உயர்கல்வி அளிக்கும் அமைப்பு |
இணையம் | கணிப்பொறிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும்(மின்னஞ்சல்,இணையதளம் போன்ற வசதிகளைக் கொண்ட)உலகம் தழுவிய தகவல் அமைப்பு |
இணைய முகவரி | ஒரு இணையதளத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படும் முகவரி போன்ற விவரத் தொடர் |
இணையவலை | இணையதளம் |
இணைவிழைச்சு | உடலுறவு |
இணைவேந்தர் | (தனியார் பல்கலைக்கழகத்தின்)நிர்வாகத்தில் முழு அதிகாரமுடைய தலைவர் |
இத்தகைய | (கூறப்பட்ட)இந்த விதமான |