இ - வரிசை 79 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இல்வாழ்பேய் | துஷ்டமனைவி. |
இல்வாழ்வான் | இல்லாச் சிரமத்தோன். |
இல்வாழ்வு | இல்வாழ்க்கை. |
இவணம் | இங்கே. |
இவநட்டம் | மிளகு. |
இவரும் | உலாவும். |
இவறன்மை | அசட்டை, ஆசை, உலோபக்குணம். |
இழப்புணி | இழந்தவர். |
இழவுகாரன் | சாவுக்குரியவன். |
இழருவிழுதல் | சாதல். |
இழவுவினாவல் | இழவுகொண்டாடல். |
இழவுவீடு | சாவீடு. |
இழவோலை | சாவோலை. |
இழிகடை | அறக்கீழானது. |
இழிகட்பேருங் கண்ணணார் | ஒருபுலவர், இவர் கடைச்சங்கத்திருந்தவர். |
இழிகண் | இழியற்கண். |
இழிகுலம் | தாழ்ந்தகுலம். |
இழிங்கு | ஈனம், வடு. |
இழிச்சொல் | பழிச்சொல். |
இழிஞர் | சண்டாளர். |