இ - வரிசை 78 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இலைப்பணிகாரம்

ஒருவிதப் பணிகாரம்.

இலைப்பாசி

ஒருபூண்டு.

இலைமூக்கரிகத்தி

இலை காம்பரியுங்கருவி.

இலையாகிருதி

இலையாகாரம்.

இலையாடுபொலிலிசை

கடும்பொலிசை.

இலையுதிர்வு

இலைசொரிவு, முதுகாடு.

இலௌகீகதருமம்

உலகாசாரம்.

இலௌகீகப்பிரக்கிரியை

இருவகை வழக்கினுள் ஒன்று. அது உலகவழக்கு.

இல்பொருளுவமம்

இல்லுவமை.

இல்பொருள்

இல்லாதபொருள்.

இல்லதாரம்

இல்லாச்சிரமம்.

இல்லவள்

மனைவி

இல்லாதபொய்

முழுப்பொய்.

இல்லாத்தனம்

வறுமை.

இல்லாப்புளுகு

பெரும்பொய்.

இல்லிக்குடம்

சில்லியுள்ளகுடம்.

இல்லிடம்

அகலம், வீடு.

இல்லெலி

ஆகு.

இல்வலன்

ஓரசுரன்.

இல்வழக்கு

கூடாவழக்கு.