இ - வரிசை 77 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இலிங்கிகள் | தபசிகள், முனிவர். |
இலிந்தகம் | கருங்குவளை. |
இலிற்றும் | துளிக்கும். |
இலீலாவிநோதம் | சுரதவிளையாட்டு. |
இலுப்பைக்கட்டி | இலுப்பைப் பிண்ணாக்கு. |
இலேசர் | வானோர். |
இலேபி | இலபி, பூச்சு. |
இலேபிதம் | தடவல். |
இலேலிகானம் | பாம்பு. |
இலேவனம் | மெழுகுதல். |
இலேவுந்து | கல்லுப்பு. |
இலைக்கதவு | ஒருவகைக்கதவு. |
இலைக்கள்ளி | ஒருவகைக்கள்ளி. |
இலைக்கறி | கீரை |
இலைக்கிளி | தத்துக்கிளி. |
இலைக்குட்டி | பலங்கெட்ட வாழைக்குட்டி. |
இலைக்குறடு | நீண்டகுறடு. |
இலைக்கொடி | வெற்றிலைக்கொடி. |
இலைக்கொழுக்கட்டை | ஒருவகைக்கொழுக்கட்டை. |
இலைப்பசளி | பெரும்பசளி. |