இ - வரிசை 76 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இலாசியம் | நடனம். |
இலாசை | பொரி. |
இலா | அரக்கு, செம்பஞ்சு. |
இலாஞ்சனை | இலாஞ்சனம் |
இலாடசங்கிலி | ஒரு சங்கிலி, கடுத்தம். |
இலாடர் | இலாடதேசத்தார். |
இலாடவி | அகில். |
இலாடன் பருத்தி | ஒரு பருத்திச்செடி. |
இலாதார் | சஞ்சாயம். |
இலாந்துதல் | மச்சுச்சாந்திடுதல். |
இலாவாதேவி | கொடுக்கல்வாங்கல். |
இலிகம் | எலி. |
இலிகிதன் | எழுத்துக்காரன். |
இலிகித்தல் | எழுதுதல். |
இலிங்கங்கட்டி | இலிங்கதாரி. |
இலிங்கபுராணம் | அட்டாதசபுராணத்தொன்று. |
இலிங்கப்புடோல் | ஐவிரலி, கொவ்வை. |
இலிங்கப்புற்று | ஒரு மேகநோய். |
இலிங்கர் | இலிங்கிகள். |
இலிங்கி | ஒரு சைவ சந்நியாசி. |