இ - வரிசை 73 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரூமிமஸ்தகி | ஒருமருந்து. |
இரேகம் | தேகம். |
இரேகாத்திரயம் | அபயஞ்செய்தல். |
இரேகு | ஆயம். |
இரேசக்குணா | கடுகு. |
இரேசந்திரம் | இரதம். |
இரேசம் | இரசம். |
இரேதஸ்கலிதம் | விந்து ஒழுகிவிடல். |
இரேவதிகொண்கள் | பலதேவன். |
இரைக்குடர் | இரைப்பை. |
இரைநீர் | கடல். |
இரைப்பெட்டி | இரைதங்கும் பை. |
இரைப்பெட்டி | குஞ்சுகளுக்கு இரையினை எடுத்து சென்று கொடுப்பதற்காக காகம் முதலிய பறவைகள் தாடையில் உள்ள பை போன்றதொரு அங்கம் |
இரௌத்தம் | குதிரைச்சேவகம். |
இலகல் | இலகுதல். |
இலகுதல் | ஒளிசெய்தல். |
இலகுமா | இலகிமா. |
இலக்கணக்கொத்து | ஒரு அரிய விலக்கண நூல். |
இலக்கணச்சிதைவு | வழுவாய் வழங்குஞ்சொல். |
இலக்கணச்சுழி | நல்லங்கச்சுழி. |