இ - வரிசை 72 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இருப்புநெஞ்சு | இரக்கமில்லாத நெஞ்சு கல்நெஞ்சு. |
இருப்புமுள் | குற்றுக்கோல். |
இருப்புமுறி | ஒருசெடி. |
இருப்புலக்கை | ஓராயுதம். |
இருப்புலி | துவரை. |
இருப்பூரல் | இரும்புக்கறை. |
இருமடியேவல் | ஈரேவல். |
இருமனம் | சந்தேகம். |
இருமுதல் | கக்குதல். |
இருமுரடன் | முரட்டுக்குணன். |
இரும்பலி | இரும்பிலி. |
இரும்பிலி | ஓரூர், ஒருசெடி. |
இரும்புக்காய்வேளை | காய்வேளை. |
இரும்புத்துப்பு | துரு, மண்டூரம். |
இரும்புலி | ஒருசெடி, துவரை. |
இருவாய்ச்சி | இருவாட்சி. |
இருவாளிப்ப | இருமனம். |
இருளிச்செவி | அமுக்கிராஞ்செடி. |
இருள்முகா | நாவி. |
இருள்வலி | கதிரவன் |