இ - வரிசை 71 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இருதிராசம் | வேனில். |
இருதுக்காட்சி | அகப்பொருட்டுறையினொன்று. |
இருதுசந்தி | பருவச்சங்கிரமம். |
இருதுசாந்தி | ஒருசடங்கு, சோபனகலியாணம். |
இருதுவிருத்தி | வருடம். |
இருதொண்டு | பதினெட்டு. |
இருதோத்தி | சத்தியவசனம். |
இருதோற்றம் | சரமசரம். |
இருத்தம் | பிரகாரம். |
இருநிதிக்கிழவன் | குபேரன். |
இருநிலம் | பூமி. |
இருநினை | இருமனம். |
இருபன்னியம் | சேங்கோட்டை. |
இருபுட்சன் | இந்திரன். |
இருபுறவாழ்த்து | இருமரபின் புகழ்கூறல். |
இருப்பாணி | இரும்பாணி. |
இருப்பாயுதம் | ஆயுதப்பொது. |
இருப்புக்கிட்டம் | கீச்சுக்கிட்டம். |
இருப்புக்கொல்லி | சிவனார்வேம்பு. |
இருப்புத்தட்டுமுட்டு | இரும்புமணை. |