இ - வரிசை 7 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இடையில் | இடைப்பட்ட காலத்தில் அல்லது இடைப்பட்ட இடத்தில் அல்லது நடுவில் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல் |
இடையினம் | மெய்யெளுத்துகளில் மூன்று பிரிவுகளுள் (வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் இடைப்பட்ட நிலையில் ஒலிக்கும்) ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவு |
இடையீடு | குறுக்கீடு |
இடையூறு | தடை |
இடையே | இடையில் |
இடைவிடாத | (தொடங்கி முடியும் வரை)நடுவில் நிற்காத அல்லது நிறுத்தப்படாத, தொடர்ச்சியான |
இடைவிடாமல் | (தொடங்கி முடியும் வரை) நடுவில் நிற்காமல் அல்லது நிறுத்தப் படாமல், தொடர்ச்சியாக |
இடைவெட்டு | 1.(பேச்சில் ) குறுக்கிடுதல் 2.(இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கு இடையிலான) குறுகிய நேரத்தில் இடம்பெறும் ஒரு நிகழ்வு |
இடைவெளி | (இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையில்)கழிந்து சென்ற காலம் |
இடைவேளை | (திரைப்படம்,விளையாட்டு,அலுவலகம் முதலியவற்றில் உணவு ய்ஹேநீர் முதலியன அருந்தத் தரப்படும்)குறுகிய ஓய்வு வேளை |
இண்டு இடுக்கு | மிகச் சிறிய இடைவெளி |
இணக்க சபை | உள்ளூர்ப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட பன்சாயத்து போன்ற அமைப்பு |
இணக்க சபை | சிறிய பிணக்குகளைத் தீர்க்கவென உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு |
இணக்கம் | பொருத்தம் |
இணங்கு | இசைதல் |
இணல் | நிழல் |
இணுக்கு | (இலை,காம்பு,தண்டு முதலியவற்றை நகத்தால்)கிள்ளித் துண்டாக்குதல் |
இணுங்கு | (இலைகள், தளிர்கள் போன்றவற்றை) கிள்ளிப் பறித்தல் |
இணை | (தனித்தனியாக இருப்பவை அலது இருப்பவர்) ஒன்று சேர்தல் |
இணை அமைச்சர் | ஓர் அமைச்சகத்தின் பொறுப்பைத் தனித்தோ காபினெட் அமைச்சருக்குக் கட்டுப்பட்டோ நிர்வகிக்கும் அமைச்சர் |