இ - வரிசை 69 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இராமாலை | கருகுமாலை. |
இராமிலன் | கணவன், காமன். |
இராயசன் | சம்பிரதி. |
இராவணன்மீசை | ஒரு புல். |
இராவணாரி | இராமன். |
இரிகு | சத்துரு. |
இரிஞ்சி | மகிழ். |
இரிஷ்டம் | பேரகத்தி. |
இரித்தகம் | பாழடைந்த வீடு. |
இரிபேரம் | வெட்டிவேர். |
இரீடை | அவமானம். |
இரீட்டம் | குறுகல். |
இருகந்தம் | இருமணம். |
இருகுரங்கின்கை | முசுமுசுக்கை. |
இருகுறணேரிசை வெண்பா | நேரிசைவெண்பாவி லொன்று. |
இருக்காழி | இரண்டு கொட்டையுள்ளது. |
இருக்காழி | இரண்டு விதை உடைய காய் |
இருங்கீர்த்தி | பெரும்புகழ். |
இருசகம் | மாதுளை. |
இருசங்கன் | பேருசங்கன். |