இ - வரிசை 68 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இராட்சகன் | இராக்கதன். |
இராட்சயன் | இராட்சகன். |
இராஷ்டிரிகை | அரிசி, சிறுவழுதுணை. |
இராஷ்டிரியன் | அரசன் மைத்துனன். |
இராட்டினத்தொட்டி | இராட்டினம்போலச் சுழல் தொட்டி. |
இராணிவாசம் | அந்தப்புரம். |
இராதைகாந்தன் | கிருட்டினன். |
இராத்திரம் | இரவு. |
இராத்திரிகாசம் | வெண்டாமரை. |
இராத்திரிவேதம் | கோழி. |
இராந்துண்டு | இலந்தை. |
இராமகுரு | வசிஷ்டர். |
இராமசகன் | சுக்கிரீவன். |
இராமச்சந்திரன் | இராமன். |
இராமதூதன் | அனுமான். |
இராமபத்திரி | ஒரு மருந்து. |
இராமபத்தினி | சீதை. |
இராமபுத்திரர் | குசலவர். |
இராமமரம் | அணி நுணா. |
இராமன்றேவி | சீதை. |