இ - வரிசை 65 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இராசசங்கம்

இராசசபை.

இராசசதனம்

அரசன்வீடு.

இராசசாரம்

மயில்.

இராசசார்த்ததூலன்

இராஜசூடாமணிக்குப்பின் அரசுசெய்த பாண்டியன்.

இராசசிருங்கம்

குடை.

இராசதரிசனம்

இராசாவைக் காணல்.

இராசதாலம்

கழுகு.

இராசதுரோகம்

இராசாக்களுக்குச்செய்யும் வஞ்சகம்.

இராசதுரோகி

அரசர்களுக்கு வஞ்சகஞ்செய்யப்பட்டவன்.

இராசத்திரவியம்

அரசர், செல்வம்.

இராசநிட்டூரம்

கொடுங்கோன்மை.

இராசநீதி

இராசதருமம்.

இராசநோக்காடு

பிரசவவேதனை.

இராசநோக்கு

இராசகிருபை, இராசபார்வை.

இராசபஞ்சகம்

அரசாட்சியி னிடைஞ்சல், இராசபயம்.

இராசபட்டம்

இராசாதிகாரம், முடிசூட்டு.

இராசபட்டினம்

இராசககர்.

இராசபத்திரம்

இராசகட்டளை.

இராசபத்தினி

இராசன்றேவி.

இராசபம்

கழுமை.