இ - வரிசை 64 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரவுக்கை | மார்க்கட்டுசட்டை, முலைக்கச்சு. |
இரவோர் | யாசகர். |
இராகமெடுக்க | இராகமாலாபிக்க. |
இராகவேந்திரதீர்த்தர் | மத்வாசசாரியர்களுள் ஒருவர். |
இராகாந்தநிலைமர் | ்ரீகண்டமூர்த்தி. |
இராகுகாலம் | இராகுவின்காலம். |
இராகுக்கிராகம் | சந்திரகிரகணம். |
இராகூச்சிட்டம் | உள்ளி. |
இராக்கசி | அரக்கி, கருங்கச்சோலம். |
இராக்கதிர் | சந்திரன். |
இராக்காச்சால் | இரவில்காயுஞ்சுரம். |
இராசகம் | இராசகூட்டம். |
இராசகயம் | இராசயானை. |
இராசகனி | எலுமிச்சைக்கனி. |
இராசகாரியம் | அரசியல். |
இராசகீரி | வெள்ளைக்கீரி. |
இராசகுஞ்சரன் | பரராஜகுஞ்சர பாண்டியன். |
இராசகுதிரை | அரசுபரி. |
இராசகோலம் | இராசவேஷம். |
இராசகோழை | இராசபயம், ஒரு கபநோய். |