இ - வரிசை 63 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரத்தினகபுவை | பூமி. |
இரத்தினகருப்பம் | சமுத்திரம். |
இரத்தினகர்ப்பேசுவரம் | சிவதலங்களாயிரத்தெட்டனு ளொன்று. |
இரத்தினசானு | மகாமேரு. |
இரத்தினமாத்திரை | ஒருகுளிகை. |
இரத்தினாகரம் | கடல், மகோததி. |
இரத்தினாங்கி | இரண்டாம்மேளகர்த்தா. |
இரத்தோற்பலம் | செங்குவளை, செந்தாமரை. |
இரப்புணி | இரப்போன். |
இரமன் | காமன், நாயகன். |
இரமாபதி | திருமால். |
இரமாப்பிரியம் | தாமரை. |
இரம்பியம் | மிளகு. |
இரவலர் | ஏற்போர். |
இரவலாளர் | யாசகர். |
இரவறிவான் | கோழிச்சேவல். |
இரவிகுலம் | சூரியவமிசம். |
இரவிநாள் | இரேவதி. |
இரவிநிறமணி | சாதுரங்க பதுமராகம். |
இரவிபுடபுத்தி | சூரியனது உத்தமபுடம். |