இ - வரிசை 62 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரத்தபானம் | இரத்தம் பருகல். |
இரத்தபிண்டம் | சீனமல்லிகை. |
இரத்தபுட்பிகர் | மூக்கிரட்டை. |
இரத்தப்பை | அட்டை. |
இரத்தப்பழி | கொலைப்பழி. |
இரத்தப்பிரவாகம் | இரத்தப்பெருக்கு. |
இரத்தமண்டலம் | செந்தாமரை. |
இரத்தமாரணம் | காவிக்கல். |
இரத்தவடி | வைசூரிக்குரு. |
இரத்தவள்ளி | செவ்வள்ளிக்கிழங்கு. |
இரத்தவற்கனம் | செம்பு. |
இரத்தவிரியன் | ஒருவிஷப்பாம்பு. |
இரத்தவீசன் | மாதுளை. |
இரத்தவெடில் | இரத்தமணம். |
இரத்தாக்கம் | எருமைக்கடா, புறவம். |
இரத்தாக்கன் | குரூரன். |
இரத்தாதரம் | தோல். |
இரத்தாதிசாரம் | பிராந்திநோய். |
இரத்தாம்பரம் | சிவப்புப்புடவை. |
இரத்தாற்புதகிரந்தி | ஒருவகைக் கிரந்திநோய். |