இ - வரிசை 61 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரத்தக்கவிச்சு | இரத்தவெடில். |
இரத்தக்கிலிஷ்டம் | ஒருவகைநோய். |
இரத்தக்குலை | ஒருநோய். |
இரத்தக்கொழுப்பு | இரத்தபுஷ்டி, கருவம். |
இரத்தசந்தனம் | செஞ்சந்தனம். |
இரத்தசந்தியகம் | செங்கழுநீர்ப்புட்பம். |
இரத்தசாகம் | செங்கீரை. |
இரத்தசிகுவம் | சிங்கம். |
இரத்தசூலை | சூதகவாய்வு. |
இரத்தசெந்துகம் | நாங்கூழ். |
இரத்தஞ்சிந்துதல் | கொல்லுதல். |
இரத்தட்சயம் | இரத்தகாசம். |
இரத்தத்துண்டம் | கிளி. |
இரத்தத்தொடர்வு | இரத்த சம்பந்தம். |
இரத்தநரம்பு | உதிரநரம்பு. |
இரத்தபலை | கோவப்பழம். |
இரத்தபழம் | ஆலமரம். |
இரத்தபாதம் | கிளி. |
இரத்தபாரதம் | சாதிலிங்கம். |
இரத்தபாளம் | மூசாம்பரம். |