இ - வரிசை 6 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இடைக்கிடை

சில தடவைகள்

இடைகழி

(பழைய வீடுகளில்) வீட்டின் வெளிவாசலுக்கும் உள்வாசலுக்கும் இடையில் உள்ள பகுதி

இடைச்செருகல்

(எழுதப்பட்ட)மூல பாடத்தில் பிறரால் இடையிடையே சேர்க்கப்பட்ட பகுதி
ஒருவர் இயற்றிய நூலில் பிறர் இயற்றிய பகுதியைப் புகுத்தல்

இடைச்சொல்

தன்னளவில் பெயர்சொல்,வினைச்சொல்,பெயரடை,வினையடை ஆகிய அடிப்படைச் சொல்வகையைச் சேர்ந்ததாக இல்லாமல் வேறொரு சொல்லையோ தொடரையோ சார்ந்து இலக்கணச் செயல்பாட்டினால் மட்டுமே பொருள் தரும் சொல் வகை
பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் சார்ந்துவரும் சொல்வகை

இடைஞ்சல்

ஒன்றின் செயல்பாட்டுக்கு அல்லது இயக்கத்துக்குக் குறுக்கீடாக இருப்பது
தடை
தொல்லை
தொந்தரவு

இடைஞ்சல்

வறுமை

இடைத்தரகர்

பெரும் பேரத்தை முடித்துவைக்கும் நபர்

இடைத்தேர்தல்

ஒரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ராஜினாமா செய்தாலோ அல்லது மரணமடைந்தாலோ அந்தத் தொகுதியில் நடத்தப்படும் தேர்தல்/ சட்டசபைக்கோ பாராளுமன்றத்துக்கோ வரையறுக்கப்பட்ட காலத்துக்கு முன் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு

இடைநில்

(பள்ளி மாணவர்கள் )படிப்பைத் தொடராமல் பாதியிலேயே நிறுத்திக் கொள்ளுதல்

இடைநிலை

இடைப்பட்ட நிலை
மரபு இலக்கண முறைப்படி)பகுதி விகுதி எனப்பகுக்கக் கூடிய பெயர்ச்சொல்லின் இடையில் நிற்கும் கூறு/வினைமுற்று ,வினையெச்ச வடிவங்களில் காலம் காட்டும் கூறு

இடைநிலைப்பள்ளி

நடுநிலைப்பள்ளி,எட்டாம் வகுப்புவரை உள்ள பள்ளி

இடைநிறுத்து

(தற்காலிகமாக)நிறுத்திவைத்தல்

இடைநீக்கம்

(தவறு செய்ததாகக் கருதப்படும் ஒருவரை) நிறுவனம், கட்சி போன்றவற்றில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கும் செயல்

இடைப்பட்ட

(குறிப்பிட்ட இரண்டு இடங்களுக்கு அல்லது காலத்துக்கு) நடுவில் உள்ள

இடைமறி

குறுக்கிடுதல்
வழிமறித்தல்

இடைமறிப்பு

(ஒன்று) மேலும் தொடராதவாறு தடுக்கும் செயல்,குருக்கீடு

இடையறாத

இடைவிடாத,தொடர்ச்சியான

இடையறாமல்

இடைவிடாமல்

இடையன்

ஆடு அல்லது மாடு மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டவன்

இடையிடையே

நடுநடுவே,அவ்வப்போது