இ - வரிசை 58 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரசிதசுத்தி | ஈயம். |
இரசிதநாள் | சுக்கிரவாரம். |
இரசிப்பு | இனிமை, உருசி. |
இரசுவம் | அற்பம். |
இரசுனம் | உள்ளி. |
இரசேந்திரம் | இரசம், பரிசனவேதி. |
இரசேந்திரியம் | நாக்கு. |
இரசோகரன் | வண்ணான். |
இரசோபலம் | இருள், முத்து. |
இரசோரசம் | இருள். |
இரச்சுவம் | கவண். |
இரச்சுவும் | குற்றெழுத்து. |
இரச்சை | கயிறு. |
இரட்சகத்தா | காவற்கடவுள், விஷ்ணு. |
இரட்சணம் | இரட்சிக்குதல். |
இரட்சண்ணியன் | இரட்சகன். |
இரட்சம் | இரட்சை. |
இரட்சை | காவல் |
இரட்டர் | வைசியர். |
இரட்டைக்குலம் | உபசாதி. |