இ - வரிசை 52 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இந்திரியகோசரம் | புலனுக்கெட்டியது. |
இந்திரியத்துவாரம் | பொறிவாயில். |
இந்திரியநிக்கிரகம் | இந்திரியமடக்கல். |
இந்திரியப்பிரத்தியட்சம் | பஞ்சேந்திரியக் காட்சி. |
இந்திரியவம் | வெட்பாலை. |
இந்திரியவருக்கம் | பஞ்சேந்திரியம். |
இந்திரியவிப்பிரதிபத்தி | திரிப்புக்காட்சி. |
இந்திரியாசங்கம் | அனுபவவெறுப்பு. |
இந்திரியாபதனம் | உடல். |
இந்திரேகம் | வெட்பாலை. |
இந்திரேபம் | வெட்பாலை. |
இந்திரகேள்வன் | திருமால். |
இந்திரைக்குமூத்தாள் | மூதேவி. |
இந்துகமலம் | வெண்டாமரை. |
இந்துசனகம் | சமுத்திரம். |
இந்துதலம் | சந்திரகலை. |
இந்துதேசம் | சிந்துதேசம். |
இந்துபம் | மிருகசீரிடம். |
இந்து புத்திரன் | புதன். |
இந்துரத்தினம் | முத்து. |