இ - வரிசை 50 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இத்துமா | விக்கல். |
இத்துரா | காவட்டம்புல். |
இத்துவரம் | எருது. |
இத்துவரன் | நீச்சன். |
இத்துவரி | வியபிசாரி. |
இந்தம்பரம் | நீலோற்பலம். |
இந்தரி | இராகு. |
இந்தனோடை | உத்தரீயம். |
இந்திந்திரம் | வண்டு. |
இந்திரகுஞ்சரம் | இந்திரன்யானை. |
இந்திரகுதிரை | உச்சைச்சிரவம். |
இந்திரகொடி | இடி. |
இந்திரகோ | காமதேனு. |
இந்திரசத்தி | இந்திராணி. |
இந்திரசாபம் | வானவில். |
இந்திரசுகந்தம் | நன்னாரி. |
இந்திரசுரசம் | நொச்சில். |
இந்திரதனு | வானவில். |
இந்திரதிசை | கிழக்கு. |
இந்திரதிரு | மருதமரம். |